Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th May 2021 13:13:01 Hours

இராணுவ மோட்டார் ரோந்து, ட்ரோன் படை, கடற்படை, விமானப்படை, பொலிஸாருடன் இணைந்து கண்காணிப்பு பணிகளில்

கொவிட் – 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கபட்டுவரும் சமூக பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய உடனடி செயற்பாட்டு பிரிவினர் மற்றும் விஷேட படை மோட்டார் ரோந்து படை, காலாட் படையினர் இணைந்து கண்காணிப்பில் ஈடுப்பட்டனர் அத்தோடு மேல் மாகாணத்தின் நெரிசலான பகுதிகளில் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவ ட்ரோன் படையும் பங்கெடுத்துள்ளது.

அதேபோல் கடற்படை மற்றும் விமானப்படையிரும் பொலிஸாரும் பயணத்தடைகளை முறைமையாக நடைமுறைப்படுத்தவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கடற்படை மற்றும் விமானப்படையின் சிறப்பு நடவடிக்கைகள் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மே 22-23) ஆகிய இரு தினங்களில் சட்ட ஒழுங்கு விதிகளை பேணுவதற்கும் உதவிகளை வழங்கினர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டலின் 14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா மற்றும் 142 பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிலாந்த பெர்ணான்டோ ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலும் இராணுவத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.