Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th May 2021 21:54:37 Hours

தளபதியின் ஆலோசனையில் பல்லேகலயில் வைத்தியசாலை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில்

பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா (23) காலை 11 வது படைப்பிரிவு வளாகத்துக்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இராணுவத்தினருக்கான தனியான வைத்தியசாலையின் இறுதிக் கட்ட பணிகளை பார்வையிட்டார்.

11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே தளபதிக்கு வரவேற்பளித்து அவரை வைத்தியசாலை வளாகத்துக்கு அழைத்துச் சென்றார். அதனையடுத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கட்டுமான தளத்தை மேற்பார்வை செய்தார்.

இயற்கையான பல்லேகல பகுதியில் ஒரு முழுமையான உபகரணங்களுடனான வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான எண்ணக்கரு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் முன்வைக்கப்பட்டதற்கு இணங்க பேரில் அக்காலப்பகுதியில் 11 படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றிய தற்போதைய இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

புதிய வைத்தியசாலை வளாகத்திற்குள், வருகை தந்த இராணுவத் தளபதி அதிகாரிகளுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதுடன் திட்டத்தின் சில முக்கிய அம்சங்களின் மேம்பாடுகளுக்கு அவசியமான பரிந்துரைகளையும் வழங்கினார். குறித்த வைத்தியசாலை விரைவாக நிறைவடையும் தருவாயில் உள்ளது.

மேற்படி வைத்தியசாலையில் 04 வார்டுகளை கொண்ட இரண்டு புதிய கட்டிடங்களில் 123 கட்டில்கள் உள்ளடங்கும். இவ் வைத்தியசாலையில் ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் உள்ள அதிகாரிகள் / சிப்பாய்களுக்கு சிகிச்சைப் பெற முடியும். வைத்திய ஆலோசனை அறைகள், கதிரியிக்க சிகிச்சை பிரிவு, ஈசிஜி பிரிவு, ஆய்வுக்கூடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் பிரிவு, மருந்தகம், இருதய நோய்க்கான கதிரியக்க சிகிச்சை பிரிவு , வார்டு மாஸ்டர் அலுவலகம், எச்.டி.யு பிரிவு, பற்சிகிச்சை பிரிவு, தாதியர் ஓய்வு அறை, உணவக அறை, மகளிர் பிரிவு, விஷேட பிரமுகர்களுக்கான அறைகள், ஓய்வு அறைகள், அதிகாரிகளுக்கான தனி நான்கு அறைகள், அதிநவீன டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பெரும்பாலான நவீன உபகரணங்கள் என்பனவற்றை கொண்டதாக காணப்படும். அடுத்த கட்டிடத்தில் வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருந்துக் கட்டும் அறை,சத்திர சிகிச்சை பிரிவு, மீட்பு பகுதி, சலவை பிரிவு, பிசியோதெரபி பிரிவு, நிர்வாக வளாகம், மருத்துவ அதிகாரிகளின் தங்குமிடம் உள்ளிட்ட பகுதிகளும் அமைந்துள்ளன.

ஆரம்ப கட்டத்தில் பத்து மருத்துவ அதிகாரிகள் இந்த திட்டத்தின் படி வைத்தியாலையில் சேவை ஆற்றுவர். இதனால் ஓய்வுபெற்ற மற்றும் சேவை செய்யும் இராணுவ வீரர்களின் நீண்டகால வைத்திய தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.