Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd May 2021 15:05:31 Hours

112 வது பிரிகேட் படையினரால் மேம்படுத்தப்பட்ட 260 கட்டிகள்களுடன் கூடிய இடைநிலை சிகிச்சை நிலையம் திறப்பு

பதுளையிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பழைய ஆடைத் தொழிற்சாலை இராணுவத்தினரால் கொவிட் – 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான இடைநிலை பராமரிப்பு மையமாக மேம்படுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (23) சுகாதார துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஊவா மாகாணத்துக்குள் செயற்பாட்டில் இருக்கும் இடைநிலை சிகிச்சை மையங்களான பிந்துனுவெவவில் 200 கட்டில்களும் கஹகொல்லவில் 190 கட்டில்களும் காணப்படுகின்ற நிலையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவாவினால் மேற்படி 260 கட்டில்களும் முறையாக கையளிக்கப்பட்டன.

11வது படைப்பிரிவு தளபதி மற்றும் 112 வது பிரிகேட் தளபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 112 வது பிரிகேட் படையினரால் மேற்படி இடைநிலை சிகிச்சை மையங்களில் இருப்போருடைய தேவைகளை மேம்படுத்தும் நோக்கில் மனித வள உதவி மற்றும் தொழில்நுட்ப உதவி பெற்றுக்கொடுக்கப்பட்டது.

ஊவா மாகாண சபை அரசியல் தலைவர்கள், பதுளை மாநகர சபை, பதுளை மாவட்ட செயலக ஊழியர்கள் மற்றும் பதுளை மாவட்ட இ.போ.ச டிப்போ ஊழியர்களும் மேற்படி இடைநிலை பராமரிப்பு மையங்களை மேம்படுத்து உதவியதுட நோயாளிகளுக்கு தங்குமிட வசதிகள், மருத்துவ, சுகாதார மற்றும் தொலைக்காட்சி வசதிகளைக் கொண்டதாக மேற்படி சிகிச்சை நிலையங்கள் அமைந்துள்ளது.

குறித்த மேம்பாட்டு செயற்திட்டத்தின் போது 11வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே 112 பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திஸாநாயக்க, ஊவா மாகாண சபையின் தலைமைய செயலாளர் திரு.பி.பி விஜேரத்ன, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த டி சில்வா, பொது சுகாதார வைத்திய நிபுணர் வைத்தியர் நிமல் கமகெதர ஆகியோர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.