Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2021 15:09:46 Hours

அதிக தேவையுள்ள மாவட்டங்களை மையப்படுத்தி தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு தலைவர் அறிவுரை

கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் திட்டம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் அறியப்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும் அதிக தேவையுள்ள பகுதிகள் தொடர்பில் அறிந்துகொண்டதன் பின்னர் நாட்டிற்கு அதிகமான தடுப்பூசி கொண்டுவரப்பட உள்ளதாகவும், இலங்கைக்கான சீனத் தூதவர் ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பின் போது நன்கொடையாக 500,000 தடுப்பூசிகளை பெற்றுத்தருவதாக ஜனாதிபதியிடம் உறுதி அளித்ததோடு, ஸ்புட்னிக் தடுப்பூசி நாளைய தினத்தில் நிறைவடைய உள்ளதாகவும், மேலும் சின்னோபார்ம் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு நேற்றுக்குள் நிறைவடைந்து என பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா புதன்கிழமை (20) நடைப்பெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

ராஜகிரியவிலுள்ள கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் கூட்டத்தில் கௌரவ சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாட்டின் வரலாற்றில் எதிர்கொண்டுள்ள மிகக் கொடிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய ரீதியான அவசியத்தையும் உணர்ந்து அதற்காக மகத்தான மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நன்றி தெரிவித்த தளபதி மூன்று விதமான தனிமைப்படுத்தல் முறைமைகளை பின்பற்றப்படுவதாகவும் (கிராம சேவகர் பிரிவுகள் பொலிஸ் பிரிவு பயணத் தடைகள்) அதன் போது பொதுமக்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் அவர் அறிவுறுத்தினார்.

2021 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி இரவு 11.00 மணிக்கு அமல்படுத்தப்படவுள்ள பயணக் கட்டுப்பாடு மே 25 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை தொடரும் அதே வேளை 25 மே 2021 இரவு 11 மணி முதல் 28 மே 2021 அதிகாலை 11 வரை பயணத்தடை மீண்டும் அமுல்படுத்துதல் மற்றும் தனிமைப்படுத்தலினை முறையாக ஆராய்ந்து பயணத்தடைகளை நீக்குதல் தொடர்பில் ஆராய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் வீட்டிற்குள் தனிமைப்படுத்தும் முறைமை தொடர்பாக சில தரப்புகள் தவறான விளக்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும், நோயாளியாக ஒருவர் அறியப்பட்ட பின்னர் மூன்று படிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் அதன்படி அறிப்பட்ட நோயாளி தொடர்பில் அப்பகுதியிலுள்ள வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு அவருடை நோய் அறிகுறிகள் தொடர்பில் அறிந்துகொள்ளப்பட்டதன் பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கும் விதம் தொடர்பில் தீர்மானிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அம்பியூலன்ஸ்களுடன் சிகிச்சைகளுக்கான இராணுவ வைத்தியர்களை இணைத்துள்ளதால் இதனூடாக பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியாலை அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு கொண்டு சேர்க்க முடிவதுடன் இத்திட்டமானது களுத்துறையில் நாளை முதல் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது நிலைப்பாட்டினை அறிவுறுத்தியதுடன் ஏனைய தரப்பினரும் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.