Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2021 14:32:16 Hours

இராணுவதினருக்கு இரண்டு நட்சத்திர நிலையுயர்வு

புதிதாக மேஜர் ஜெனர்களாக பதவி உயர்வு பெரும் 12 மேஜர் ஜெனரல்களுக்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் புதன்கிழமை (19) 12 ஆவதி தேசிய போர் வெற்றி விழா நிகழ்வின் போது இரண்டு நட்சத்திர சின்னங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அதன்படி 59 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.டி.சூரியபண்டார இலங்கை கவசப் படை, மின்சார பொறியியல் மேஜர் ஜெனரல் இந்து சமரகோன்பணிப்பாளர் இலங்கை மின்சார பொறியியல் படை , 62 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர இலங்கை பீரங்கிப் படை, 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார இலங்கை சிங்கப்படை, பாதுகாப்பு சேவைக்கான கட்டளை மற்றும் பணியாளர்கள் பயிற்றுவிப்பு கல்லூரியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர, 52 வது படைப்பிரிவு தளபதி கஜபா படையின் மேஜர், ஜெனரல் ஹரேந்திர பீரிஸ், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப் பணி மேஜர் ஜெனரல் சமன் லியனகே, தள பொறியியல் பிரிகேட் தளபதி இலங்கை பொறியியல் படையின் மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன, இலங்கை கவசப் படை பிரிகேடின் தளபதி மேஜர் ஜெனரல் தாரக ரத்னசேகர, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான பணிப்பாளர் கெமுனு ஹேவா படையின் மேஜர் ஜெனரல் கீர்த்தி கொடவத்த, 21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹன் ரத்நாயக்க கஜபா படை மற்றும் அம்பாறை போர்கள பயிற்சி கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரே ஆகியோரால் தளபதிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதன் போது நிலை உயர்வு பெற்றவர்களுக்கு இராணுவ தளபதி வாழ்த்துக்களை தெரிவித்துடன் புதிய இரு நட்சத்திர அதிகாரிகளிடம் தங்களது பொறுப்புகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றும்படியும் கேட்டுக்கொண்டார். மேலும் நாட்டின் நிலை உயர்வுகள் அவர்களுடைய திறமைக்கான அடையாளம் என்றும், நடத்தைக்கான தகைமை என்றும் சுட்டிக்காட்டினார். அதனையடுத்து 12 நிலை உயர்வு பெரும் அதிகாரிகளுக்கான சின்னங்களை அவர் அணிவித்ததுடன், இராணுவ தளபதியுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அவர்கள் அவருக்கான நினைவுப் பரிசு ஒன்றையும்