Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2021 07:11:39 Hours

மித்தெனிய மற்றும் கிரம மாவட்ட வைத்தியசாலைகள் கொவிட் - 19 தொற்றாளர்களை எதிர்கொள்ள தயார் நிலையில்

23 ஆவது கஜபா படையணியினர், 3 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் 112 பிரிகேடின் பொறியியல் சேவை படையினர் இணைந்து முன்னெடுத்த துரித நடவடிக்கையின் பலனாக மித்தெனிய, கிரம பகுதிகளின் மாவட்ட வைத்தியசாலைகள் இடைநிலை பராமரிப்பு நிலையங்களாக மாற்றப்பட்டு குறித்த இரண்டு பராமரிப்பு நிலையங்களினதும் பணிகள் வௌ்ளிக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டன.

அவசர நிலைமையில் பயன்படுத்த கூடிய வகையில் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து கொவிட் – 19 தொற்றாளர்களை பராமரிப்பதற்கு அவசியமான வகையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி பிரிகேட் தளபதிகள் கட்டளை அதிகரிகளின் வழிகாட்டலுக்கமைய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி இத்திட்டத்தை படையினர் நிறைவு செய்தனர்.

மேற்படி பிரிவானது அவசர சிசிக்சை செயல்முறைக்கு உகந்த வகையில் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய நிறுவப்பட்டுள்ளதோடு, 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக மற்றும் 122 வது பிரிகேட் தளபதி ஜானக பல்கேகும்புர ஆகியோரின் ஒத்துழைப்புடன் குறித்த நிலையங்களின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.