Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2021 08:20:41 Hours

12 வது போர் வெற்றி நாளில் 64 வது படைப்பிரிவினரால் 100 தென்னங் கன்றுகள் விநியோகம்

கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ‘துரு மிதுரு நவ ரட்டக்’ திட்டத்தின் கீழ் தேசிய வனப்பகுதி, உணவு உற்பத்தி மற்றும் நாட்டை செழிப்பாக்கும் திட்டம் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் படையினரால் மேலும் பலப்படுத்தப்பட்டது.

12 ஆவது போர் வெற்றி நாள் (மே 18) ஐ முன்னிட்டு 100 தென்னங் கன்றுகள் பாதுகாப்பு படையினரின் விவசாய குடும்பங்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டன முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்‌ஷ மற்றும் 64 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 64 வது படைப்பிரிவு ஒட்டுச்சுட்டான் கிராம மக்களிடையே விநியோகிப்பதற்கான தென்னங் கன்றுகள் ஒட்டுச்சுட்டான் கோவிலுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 64 படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன, 642 பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஷசிக பெரேரா ஆகியோர் செவ்வாய்க்கிழமை (18) சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.