Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2021 21:44:32 Hours

ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பியால் நானயக்காரவசத்தின் சேவைகளுக்கு பாராட்டு

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேரந்த கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பாதுகாப்பு படைப் பிரதேச தளபதியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பியல் நானயக்காரவசம் அவர்களுக்கு புதன்கிழமை (19) இராணுவ தலைமையகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது, ஜெனரல் சவேந்திர சில்வா, 34 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்துக்கும் அவரது படையணிக்கும் அவர் செய்த அர்ப்பணிப்பு சேவையைப் பாராட்டியதுடன், சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் மற்றும் இராணுவத்தில் தனது தொழில் வாழ்க்கையில் சில நினைவுகளை நினைவு கூர்ந்தார். ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய நியமனங்களில் பணியாற்றினார் மற்றும் ஓய்வுபெற்று செல்லும் முன் அவர் கிளிநொச்சி முன்னரங் பாதுகாப்பு பகுதியின் தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இலங்கை இராணுவ சேவைப் படையணியை சேர்ந்த பெருமைமிக்க வீரர்களில் ஒருவரான ஓய்வு பெற்று செல்லும் சிரேஷ்ட அதிகாரியான இவர் இராணுவத் தளபதியின் விருப்பத்திற்கும் சிந்தனைக்கும் பாராட்டுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார். உரையாடலின் முடிவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஓய்வு பெற்று செல்லும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு மற்றும் நினைவின் அடையாளமாக சிறப்பு நினைவு சின்னம் வழங்கினார்.