Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2021 12:15:49 Hours

7 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் உடையார் கட்டு தெற்கு பிரதேசங்களில் கிருமி தொற்று நீக்கப் பணிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 வது படைப் பிரிவு மற்றும் 681 வது பிரிகேட்டின் கீழ் உள்ள 7 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் உடையார்கட்டு தெற்குப் பகுதிகள் மற்றும் அப்பிரதேச வார சந்தை வாளகம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (16) கிருமி தொற்று நீக்கும் பணிகளை மேற் கொண்டனர்.

இந்த திட்டத்தில் படையினர்களுடன் சிவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்திருந்தனர்.

இப் பணிகள் 68 ஆவது படைப் பிரிவின் தளபதி, 681வது பிரிகேட் தளபதி மற்றும் 7 ஆவது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் படையினரால் மேற் கொள்ளப்பட்டது.