Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2021 20:48:05 Hours

தேசிய போர் வீரர்கள் நினைவுத்தூபியில் இடம்பெற்ற போர் வெற்றி தின நிகழ்வு

நாட்டின் இறையாண்மைக்காக தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை தியாகம் செய்த இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினர் உள்ளிட்ட தேசபக்தி வாய்ந்த வீரர்களின் மரியாதைக்குரிய வெற்றி தினத்தை நினைவுகூரும் 12 வது தேசிய போர் வீரர்கள் தின நினைவு நாள் நிகழ்வானது, புதன்கிழமை (19), பத்தரமுல்லை தேசிய போர் வீரர்களின் நினைவுச்சின்னத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்கள் மற்றும் முப்படைத் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட போர் வீரர்கள் ,கௌரவ பிரதமர், கௌரவ சபாநாயகர், மேல் மாகாண ஆளுநர், ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர் , பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் , ரணவீரு சேவா அதிகாரசபை தலைவர் மற்றும் உயிர் நீத்த போர் வீரர்களின் உறவினர்கள் ஆகியோரினால் நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கௌர பிரதமர் மற்றும் பிற புகழ்பெற்ற அழைப்பாளர்களினை தொடர்ந்து முப்படை தளபதியான ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தலைமை விருந்தினராக வருகைதந்த பின்னர், இறுக்கமான சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து, ரண விரு சேவா அதிகாரசபையினால் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆண்டின் 12 வது தேசிய போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வானது சரியாக மாலை 4.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இராணுவம் (23,962), கடற்படை (1160), விமானப்படை (443), 2598 பொலிஸார் மற்றும் 456 சிவில் பாதுகாப்புத் துறையினர்களுடன் மொத்தம் 28,619 போர் வீரர்கள், 2009 மே மாத்த்திற்கு முன்னர் இடம்பெற்ற எல்டிடிஈ பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மிகச்சிறந்த உயிர் தியாகத்தை செய்தார்கள். இந்த தேசிய விழாவின் போது அவர்களின் துணிச்சலான, விலைமதிப்பற்ற மற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்பக்கு மரியாதைக்குரிய வகையில் நினைவுகூரப்படுகிறார்கள், இந்த தேசிய விழாவின் போது, தேசிய கீதம் பாடப்பட்டு அவர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும், வீர உரை , மத சம்பிரதாயங்கள், 'ரண பெர' வாசித்தல், ஜனாதிபதியின் உரை, நினைவுச்சின்னத்தின் மீது விமானத்தில் இருந்து பூக்கள் பொலிவது உள்ளிட்ட நிகழ்வுகள் ஆகியவை இடம்பெற்றதுடன், அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், கௌரவ சபாநாயகர், ஆளுநர், செயலாளர்கள், முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனையவர்கள் மற்றும் உயிர் நீத்த போர் வீரர்களின் உறவினர்களும் விமானப்படையின் வானவழி பூக்கள் தூவிய சில நொடிகளில் பின்னர் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

மாலை வேளையில், இராணுவ சம்பிரதாய முறைப்படி இடுகை மற்றும் ரெவில்லி ஒலியுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.