Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2021 20:52:35 Hours

'வெசாக்' தினத்தை முன்னிட்டு இராணுவ தலைமையக கட்டிடத்தை அலங்கரிக்க ஆணைபெறாத அதிகாரிகளால் வடிவமைத்த மிகப்பெரிய பௌத்த கொடி

எதிர் வரவிருக்கும் வெசக் பண்டிகையை முன்னிட்டு ,இராணுவ சிரேஷ்ட ஆணைபெறாத அதிகாரியால் வடிவமைக்கப்பட்ட அலங்கார தலைசிறந்த பௌத்த கொடி இன்று (17) காலை கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் இராணுவ தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந்த பெரிய பௌத்த கொடியானது இராணுவ பொலிஸ் படையணியின் சார்ஜன் கே.கே.எம் புஷ்பகுமார அவர்களால் உருவாக்கப்பட்டதுடன். வெசாக் தினமான மூன்று தினங்களிளும் இராணுவ தலைமையகத்தின் பிரதான கட்டிடத்தை இக்கொடி அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொடி சுமார் 100X50 அடி அளவிலான பிரம்மாண்டமான கொடியாகும்.

2020 ஆம் ஆண்டில் இதேபோன்ற கொடி வெசாக்கிற்காக அதே கலைஞரால் கொழும்பு 5 இல் உள்ள கொழும்பு மாவட்ட செயலக கட்டிடத்தின் மீது தொங்கவிட்டு அலங்கரிக்கப்பட்டது. இது 2020 ஆம் ஆண்டில் மாவட்ட செயலாளரின் பாராட்டையும் பெற்றது என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

அதற்கமைய இராணுவத் தளபதி அவர்கள் அவரது படைப்பு திறமையையும் முன்முயற்சியையும் பாராட்டினார் மற்றும் எதிர்காலத்தில் அவரது கலைப் படைப்புகளுக்கு அவருக்கு நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.