Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th May 2021 15:15:49 Hours

மேலும் 2456 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்

இன்று காலை (18) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2456 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அதிகமாக 677 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில்136 பேர் பியகம நகர் பிரதேசம் , 83 பேர் நீர்கொழும்பு , 72 பேர் கடவத்தை, மற்றும் 58 பேர் வத்தலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இதேபோல், கொழும்பு மாவட்டத்திலும் 320 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் 52 பேர் கல்கிஸ்ஸை, 35 பேர் ஹோமாகம, 25 பேர் பொரலஸ்கமுவ, 22பேர் மொரட்டுவை உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்களும் மீதமானோர் மாவட்டத்தின் வேவ்வேறு பிரதேசங்களிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 315 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 55 பேர் களுத்துறை தெற்கு நகர் பிரதேசம், 43 பேர் மொரகஹஹென, 40 பேர் களுத்துறை வடக்கு பிரதேசம் உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்களும் மீதமானோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், கம்பஹா கொழும்பு, மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து 1312 நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். ஏனைய 1114 நோயாளிகளில் 259 பேர் காலி, 255 பேர் முல்லைத்தீவு, 84 பேர் மாத்தறை, 82 பேர் பொலன்னறுவை, 60 பேர் கேகாலை , 56 பேர் ரத்னபுரி மாவட்டம்,51 பேர் புத்தளம், 50 பேர் பதுள்ளை , 46 பேர் மாத்தலை, 34 பேர் கண்டி, 25 பேர் நுவரெலியா , 23 பேர் அம்பாறை, 20 பேர் மொனராகலை, 19 பேர் ஹம்பாந்தோட்டை மாவட்டம், 17 பேர் கிளிநொச்சி , 11பேர் அனுராதபுர மாவட்டம்,5 பேர் மன்னார் மற்றும் கேகாலை மாவட்டங்கள் மற்றும் 2பேர் யாழ் மாவட்டத்திலும் இனங்காணப்பட்டுள்ளனர்.