16th May 2021 20:07:43 Hours
பயண கட்டுப்பாடுகள் விதித்த பின்னர் கண்டி வீதியில் நெருக்கடியான நிலையில் உள்ள வரிய பொதுமக்கள், வீடற்றவர்கள் ஆகியோரின் நலன் கருதி அவர்களுக்கு இராணுவ ஹொக்கி அணியின் உறிப்பினர்களால் ஞாயிற்றுகிழமை 16 ஆம் திகதி இலவச மதிய உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அதன் பிரகாரம் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றி குறித்த குழுவினர் கண்டி நகர் பிரதேசத்திக்கு சென்று குறித்த உணவு பொதிகள் மற்றும் குடி தண்ணீர் போத்தல்களை அவர்களுக்கு வழங்கினர். இந்த திட்டமானது இராணுவ ஹொக்கி கழக தலைவரும் இராணுவ பதவி நிலை பிரதானியமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டாற அவர்களின் வழக்காட்டலின் கீழ் இடம் பெற்றது.