12th May 2021 23:35:46 Hours
கொவிட்- 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக இராணுவத்தினரால் மேற் கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி நிறுவனத்தினரால் (12) புதன்கிழமை கொழும்பு இராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
தற்போதுள்ள (ICU) தீவிர சிகிச்சை பிரிவு வசதிகள் மருத்துவமனையில் மேலும் 6 புதிய படுக்கைகளுடன் சேர்க்கப்பட்டுள்ளதால், வைத்திய நிர்வாகத்திற்காக இத்தகைய பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டலுக்கமைய இராணுவ தீவிர சிகிச்சை பிரிவின் ஆலோசகர் மயக்க மருந்து நிபுணர் லெப்டினன்ட் கேணல் வைத்தியர் ஷம்பிக அபேசிங்க அவர்களின் ஒருங்கிணைப்பில் மூலம் நன்கொடையாளர்கள், இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கிருஷாந்தா பெர்னாண்டோவுடன் கலந்தாலோசித்து இராணுவ வைத்தியசாலை வளாகத்திற்கு வந்து பாதுகாப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கினர்.
இதன் போது ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சியை பிரதிநிதித்துவப்படுத்தி குழு பணிப்பாளர் திரு அப்பாஸ் ஏசுபலி மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் வழங்கல் குழு தலைமை நிர்வாக அதிகாரி பி.எல்.சி திருமதி கஸ்தூரி செல்லராஜா அவர்கள் கலந்து கொண்டு வழங்கிய குறித்த நன்கொடையை வைத்தியசாலையின் நிர்வாகத்தின் சார்பாக கொழும்பு இராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை ஆலோசகர் மயக்க மருந்து நிபுணர் லெப்டினன்ட் கேணல் வைத்தியர் சம்பிக அபேசிங்க ஏற்றுக்கொண்டார்.