Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th May 2021 19:00:48 Hours

231 ஆவது படைப் பிரிவின் படையினரால் காத்தான்குடி மற்றும் எராவூர் மக்களுக்கு கொவிட் தொற்று நோய் தொடர்பான விழிப்புனர்வு

கொவிட் -19 அறிகுறிகள், அதன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டுவதற்காக கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 ஆவது படைப் பிரிவின் 231 பிரிகேடில் உள்ள 4 ஆவது கெமுனு ஹேவா மற்றும் 11 ஆவது (தொ) இலங்கை சிங்க படையிணியின் படையினரால் சமூக திட்டமாக காத்தான்குடி மற்றும் எராவூர் நகர பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (9) காத்தான்குடி மற்றும் எராவூர் பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரின் ஒத்துழைப்புடன் விழிப்புனர்வு பட்டறை நடத்தப்பட்டது.

இப் பட்டறையானது 23 ஆவது காலாட் படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டதோடு இத் திட்டத்தில், தொற்றுநோய் பரவும் தாக்கத்தைத் தணிக்கும் நோக்கத்துடன் 231 வது பிரிகேட் தளபதி கேணல் விஜித ஹெட்டியாராச்சி அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வையில் இடம் பெற்றது.

அதே பட்டறையின்போது, இராணுவத்தினரின் உதவியுடன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத 46 நபர்களை போலீசார் கைது செய்தனர்.