13th May 2021 18:41:48 Hours
யாழ் பொது மக்களிடையே கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் 51 ஆவது படைப் பிரிவு, 512 பிரிகேட் தளபதிகள், கட்டளை மற்றும் அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கமைய 512 ஆவது பிரிகேட் படையினர், 17 வது கெமுனு ஹேவா படையணியினர் மற்றும் 14 ஆவது கஜபா படையணியினர் வியாழக்கிழமை (12) யாழ் நகரில் கிருமி தொற்று நீக்கம் பணிகளை மேற் கொண்டனர்.
அதன்படி, மத்திய பஸ் நிலையம், ரயில் நிலையம், பொதுச் சந்தை, பஸார் பகுதி, கே.கே.எஸ் வீதி, யாழ் போதனா வைத்தியசாலை வளாகம், பொது மக்கள் கூடும் பகுதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் அரச அலுவலக வளாகங்கள் ஆகிய இடங்கள் இராணுவத்தினரால் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டன.