12th May 2021 16:15:38 Hours
கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டலுக்கமைய திருகோணமலையில் உள்ள 22 ஆவது படைப் பிரிவின் கீழ் உள்ள 221 பிரிகேட் படையினரால், சமுர்த்தி பயிற்சி நிலையத்தில் மேம்படுத்தப்படும் 115 படுக்கை வசதிகளுடன் கூடிய இராணுவத்தால் மேம்படுத்தப்பட்ட இடைநிலை பராமரிப்பு மையம் முடிவுக்கட்டத்தை எட்டியுள்ளது.
திங்கள்கிழமை (10), திருகோணமலை மாவட்ட செயலாளர் திரு. சமன் தர்ஷன படிகொரல, திருகோணமலை சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் வி பிரேமநாத் மற்றும் குச்சவேலி சுகாதார வைத்திய வைத்தியர் எஸ் யமுனா, 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, 221 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியந்த காரியவசம் ஆகியோருடன் சில அதிகாரிகள் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டு திட்டத்தின் பல்வேறு விடயங்களை ஆராய்ந்தனர்.
115 படுக்கைகளைக் கொண்ட இந்த இடைநிலை பராமரிப்பு மையமானது சுகாதார அதிகாரிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் மேற்பார்வையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 221 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியந்த காரியவசம் அவர்களின் திட்டமிடலின்படி இந்த இடைநிலை பராமரிப்பு மையம் 2021 மே 15 முதல் செயல்படத் தொடங்கும்.