12th May 2021 21:29:59 Hours
கொவிட்-19 க்கு எதிராக நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதற்கான தற்போதைய நடவடிக்கையை வலுப்படுத்தும் நோக்கில், சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்கள் இப்போது நுகேகொடை , வௌ்ளவத்தை,மாளிகாவத்தை, மட்டக்குலி, மற்றும் கேதாராம, கொழும்பு மாவட்டம் மற்றும் இன்னும் சில இடங்களில் தடுப்பூசி மையங்களை நிர்வகித்து தடுப்பூசிகள் வழங்க உதவுகின்றனர். கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையகத்தின் தலைவரும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா முப்படையினர்களுக்கும் இந்த சேவையின் பின்னால் தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். கீழ் காணும் புகைப்படங்கள் இராணுவத்தினர் செயல்பாடுகளில் ஈடுபடுவதை சுட்டிக் காட்டுகின்றன.