Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th May 2021 15:38:06 Hours

121வது பிரிகேட் படையினரால் வெல்லவாயவில் புதிய இடைநிலை பராமரிப்பு நிலையம் அமைப்பு

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தேசிய தடுப்பு செயல்பாட்டு திட்டத்தை அமுல்படுத்தும் முகமாக, மத்திய பாதுபாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் ஹம்பாந்தோட்டையிலுள்ள 12 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தினர், வெல்லவாயவில் உள்ள இளைஞர் பயிற்சி மையமானது இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றி வெல்லவாய வைத்தியசாலையிடம் சனிக்கிழமை ( 8) ஒப்படைத்தனர்.

இந்த நடவடிக்யையானது ஹம்பாந்தோட்டை பிரதேசத்தின் கொவிட் வைரசின் தாக்கத்தை கருத்திற்கொண்டு 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க, 121 ஆவது பிரிகேட் தளபதி அவர்களின் வழிக்காட்டலுக்கமைய ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இடமளிக்கும் வகையில் இளைஞர் மையத்தை இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றுவதற்கு படையினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இப் பணிகள் 121 ஆவது பிரிகேட்டின் 20 இலங்கை சிங்க படையணியின் படையினரால் கட்டளை அதிகாரியின் நெருக்கமான கண்காணிப்பில் அவசரமாக மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மேம்படுத்தப்பட்ட இடைநிலை பராமரிப்பு நிலையம் சனிக்கிழமை (8) முதல் செயல்முறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்க விடயமாகும்.