Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2021 16:21:53 Hours

பொதுமக்களின் ஒத்துழைப்புடன் படையினரால் சாலையோரங்கள் துப்பரவு

யாழ்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவு படையினர் டெங்கு, நோய்த்தொற்றுகள் மற்றும் சாலை விபத்துகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக திருநெல்வேலியில் இருந்து நாவற்குழி வரையிலான சாலையோரங்களை துப்பரவு செய்யும் பணிகளில் திங்கட்கிழமை (26) மேற்கொண்டனர்.

யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் பிரதான மற்றும் சிறிய பாதைகள் . 51 வது படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட படைவீரர்கள் துப்பரவு பணிகளில் பங்குபற்றியதுடன் மக்கள் பிரதிநிதிகள், பெக்ஹோ இயந்திரம், துப்பரவு மற்றும் சேகரிப்பு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

இந்த திட்டமானது யாழ்ப்பாண மாவட்ட செயலாளரால் பெரிதும் வரவேற்கப்பட்டதுடன் பாராட்டப்பட்டது. மேலும் இந்த திட்டம் தற்போதைய கொவிட்-19 முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் சில பொதுமக்களும் படையினருக்கு புத்துணர்ச்சி வழங்கும் வகையில் சிவில் சமூகப் பாதுகாப்பு சார் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.