29th April 2021 13:40:37 Hours
58 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள புத்தளம் இலங்கை இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற விடுகை அணிவகுப்பு ஊடாக அடிப்படை ஆட்சேர்ப்பு பாடநெறி இலக்கம் 88 இன் ஊடாக 438 புதியவர்களை வெளியேறினர். இதன் பிரதம அதிதியாக பயிற்சி நிலையத்தின் தளபதிலெப்டினன்ட் கேணல் இந்திக கமல்கொடவின் அழைப்பின் பேரில் 58 வது படைப்பிரிவவின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க கலந்துக் கொண்டார்.
ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்த பயிற்சியில் இராணுவத்தில் எட்டு படையணிகளுக்கான புதியவர்கள் கலந்து கொண்டனர். அணிவகுப்பு மரியாதைக்காக அணிவகுத்திருந்த படைணினரின் அணிவகுப்பை அணிவகுப்பின் கட்டளை அதிகாரிகளுடன் இணைந’து மறுபரிசீலனை செய்த பின்னர் புதியவர்களால் வழங்கப்பட்ட மரியாதையின் ஏற்றுக் கொண்டார்.
நிகழ்வில் சிறந்த ஆட்சேர்ப்பு வீரர், சிறந்த உடற்தகுதி வீரர் போன்ற விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும் இந்த விடுகை அணிவகுப்பு கொவிட் 19 சுகாதார விதிமுறைகள் காரணமாக குறைந்தபட்ச புதியவர்களின் உறவினர்களின் பங்கேற்புடன் கூடிய சம்பிரதாயங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.