26th April 2021 22:07:15 Hours
இராணுவத்தின் புனர்வாழ்வு பணிப்பகம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக ஹிக்கடுவ சர்வதேச பயிற்சி பாடசாலையில் 10 மாற்றுத்திறனாளி போர் வீரர்களுக்கு சிறப்பு சுழியோடும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இலங்கையின் சுழியோடும் முன்னோடியான திரு ஷெஹான் பிலபிட்டிய இந்த பயிற்சிகளை வழங்கியதுடன். பயிற்றுவிப்பு நிகழ்வில் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் துஷான் சேனாரத்னவும் பங்கேற்றார்.
மேற்படி பயிற்சிகளின் போது சுழியோடல் நுட்பங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் “முடியாதவை என்று எவையும் இல்லை” என்ற மனத் திடத்தை ஏற்படுத்தும் நோக்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.