26th April 2021 18:16:07 Hours
53 வது படைப்பிரிவின் 532 வது பிரிகேட்டின் 8 வது கஜபா படையின் படையினரால் கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கிய தகவலுக்கமைய மாத்தளை, ரத்தோட்டை பகுதியில் பாழடைந்த கிணற்றில் தவறிவிழுந்த நபரொருவரின் சடலத்தை வௌ்ளிக்கிழமை (23) மீட்டனர்.
உடனடியாக குறித்த இடத்தை சென்றடைந்த படையினர் கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்து மரணமடைந் திருந்த என் ஏ விதானகே சந்திரதாச என்பவரது சடலத்தை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேற்படி மீட்பு பணியானது 53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 532 வது பிரிகேட் தளபதி மற்றும் 8 வது கஜபா படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.