Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2021 23:47:23 Hours

மாவட்ட ரீதியிலான தொற்றாளரகள் விபரம் அறிவிப்பு

இன்று காலை (27) நிலவரப்படி, கடந்த 24 மணித்தியாலயத்தில் மேலும் 997 கொவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில், பெரும்பாலானவர்கள் (173) கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இதில் 18 பேர் தெஹிவவை சேர்ந்தவர்கள், 17 பேர் ஹங்வெல்ல சேர்ந்தவர்கள், 13 பேர் மிரிஹான, முல்லேரியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள், 10 பேர் வெள்ளவத்தையை சேர்ந்தவர்கள் எனையோர் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 170 தொற்றாளர்களில் மிரிகம 17 பேரும், திவூலபிட்டிய 16 பேரும், மல்லவகேதர 15 பேரும், நிட்டம்புவ பகுதிகளைச் சேர்ந்த 13 பேரும், எஞ்சியவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

இதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் காலி மாவட்டத்தில் இருந்து மேலும் 92 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 37 பேர் பொடலவிலிருந்தும், 34 பேர் ரத்கமவிலிருந்தும், 5 பேர் யக்கலமுல்ல பகுதியை சேர்ந்தவர்களும் ஏனையவர்கள் மாவட்டத்தின் பிற இடங்களிலிருந்தும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இருந்து 562 பேர இனங்காணப்பட்டுள்ளனர். அவரகளின் விபரம் பின்வருமாறு: மொனராகவை 86, களுத்துறை 74, மாத்தளை 66, திருகோணமலை 59, குருநாகலை 49, மாத்தறை 32, பதுளை 25, புத்தளம் மற்றும் நுவரெலியா 25, யாழ்பாணம் 17, கேகாலை 16, அநுரதபுரம் 15, வவுனியா 11, கண்டி மற்றும் அம்பாறை 07, மட்டக்களப்பு 03, மன்னார், இரத்னபுரி கிளிநொச்சி பொலன்னறுவை மற்றும் அம்பாந்தொட்டை மாவட்டங்களில் தலா ஒருவர்