Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2021 12:05:59 Hours

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கொவிட் – 19 கட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வு

கொவிட் -19 கட்டுப்பாட்டுப் பணிகள் குறித்து மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு மாநாடு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, மாத்தளை மாவட்ட செயலாளர் திரு எஸ்எம்ஜீகே பெரேரா ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்காக மாவட்டத்தின் தற்போதைய நிலைமையை மேம்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இந்நிகழ்வில் சில அரச அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.