18th April 2021 10:00:04 Hours
சிங்கள – தமிழ் புத்தாண்டு விழாவை முன்னிட்டு யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டின் கீழ் நாவற்குழி பிரதேசத்திலுள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நன்கொடையாளர்களின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நன்கொடை வழங்கும் திட்டம் யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் 12 வது கெமுனு ஹேவா படையணியினரால் செவ்வாய்க்கிழமை (13) ஆரம்பிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் போது யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்ததுடன், அவரால் புத்தாண்டு நிகழ்வை கொண்டாடுவதற்கு அவசியமான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வழங்கப்பட்ட பரிசுப் பொதிகளில் அரிசி, பருப்பு, பால் பக்கட்டுக்கள், டின் மீன், கறுவாடு, தானிய வகைகள், மசாலா பொருட்கள், சக்கரை உள்ளிட்ட பொருட்களுடன் மரக்கறி வகைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
புத்தாண்டு பரிசுப் பொதிகளை பெற்றுக்கொண்டவர்கள் இவ்வாறான தொண்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தமையையிட்டு படையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
நன்கொடை நிகழ்வின் போது 523 வது பிரிகேடின் சிரேஷ்ட அதிகாரிகள், படையினர் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். latest Running | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp