Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2021 07:25:02 Hours

நல்லிணக்கத்தின் அடையாளமான குராகல குகை விகாரைக்கு இராணுவ தளபதி விஜயம்

பல வருடங்களாக ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருந்த பாழடைந்த நிலையில் காணப்பட்ட குராகல குகை விகாரை என அழைக்கப்படும் பலாங்கொடை ரஜமஹா விகாரை அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பௌத்தர்கள் அல்லாதவர்களின் பங்களிப்புடன் நல்லிணக்கத்தின் அடையாளமாக புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரால் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவத்தினால் மேற்படி விகாரையை புனரமைப்புச் செய்வதற்கான அவசியமான தொழில்நுட்ப மற்றும் மனித வள உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த புர்நிர்மாணப் பணிகளானது குரகல விகாரை மற்றும் நெல்லிகல சர்வதே பௌத்த மத்தியஸ்தானத்தின் தலைவருமான வண. வத்துகும்புறே தம்மரத்தன தேரர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

ஜெனரல் சவேந்திர சில்வா சனிக்கிழமை (10) புனித விகாரையின் வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி முதல் நூற்றாண்டு வரையிலான வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் குகைகளாலிலும் இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள புத்த மடாலயமாக பயன்படுத்தப்பட்டுள்ள இந்த விகாரையை பார்வையிட்டார். இந்த குகையின் தாது கோபுரம் அமைந்துள்ள பகுதிக்குள் சென்றபோது தளபதி செங்லாள் கட்டப்பட்ட தொல்பொருள் ரீதியாக முக்கியத்தும் பெற்ற தூபியின் மறுசீரமைப்பு பணிகளை நேரடியாக மேற்பார்வை செய்தார். இது பாரம்பரிய ஆகாச தூபி வகையைச் சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அன்றைய பிரதம விருந்தினர் பின்னர் பாலங்கோடா தஞ்சந்தென்னா வித்யாலயாவின் 240 மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள், பாடசாலை பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களை என்பவற்றையும் வழங்கி வைத்தார். அங்கு முஸ்லீம், கிறிஸ்தவ மற்றும் இந்து மத மாணவர்கள் கல்விகற்றுவருகின்றனர்.மற்றும் அவர்கள் தங்கள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் புனித தூபி அமைந்திருக்கும் வளாகத்தில் கூடியிருந்தமை சிறப்பம்சமாகும்.

இங்கு மனதை தொடும் வகையிலான கலாசார அம்சங்கள் சில இடம்பெற்றதுடன், முஸ்லிம் மாணவியொருவர் பௌத்த பாடலொன்றை பாடினார். அத்தோடு வண்ணமயமான கலாசார நிகழ்வுகள் சில இடம்பெற்ற பின்னர் மத அனுட்டானங்களின் பின்னர் பொருட்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு ஆரம்பமானது.

அதே சந்தர்ப்பத்தில், ஜெனரல் ஷவேந்திர சில்வா மாணவர்களுக்கு, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பாடாலை விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நன்கொடை தொகையை பாடசாலை பாடசாலை அதிபரிடம் வழங்கி வைத்தார். அத்தோடு சில வாரங்களுக்குள் தஞ்சந்தென்ன வித்யாலயத்தின் விளையாட்டு மைதானத்தை புனரமைக்க இராணுவத்தின் உதவி வழங்கப்படுமெனவும் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் வண வதுகும்புரே தம்மரத்தன தேரர், புத்த பிக்குகள், சிரேஸ்ட அதிகாரிகள், பக்தர்கள் மற்றும பொது மக்களும் நிகழ்வின் ஏற்பாட்டளர்களும் பங்குபற்றினர். buy shoes | Yeezy Boost 350 Trainers