Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd April 2021 14:01:05 Hours

பிரிகேடியர் உபாலி குணசேகர 62 வது படைப்பிரிவு தளபதியாக பதவியேற்பு

பிரிகேடியர் உபாலி குணசேகர வியாழக்கிழமை (01) 62 வது படைப்பிரிவின் தலைமையகத்தில் மத அனுட்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக 62 வது காலாட் படைப்பிரிவின் 10 வது பொது கட்டளை அதிகாரியாக பதவியேற்றுக்கொண்டார்.

பின்னர், 62 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி பிரிகேட் தளபதிகள் மற்றும் பதவி நிலை அதிகாரிகளால் வரவேற்பளிக்கப்பட்டதையடுத்து 11 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர்களால் பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு வழங்கப்பட்டது.

அதற்கு பின்னர் இந்த நிகழ்வின் நினைவாக மரக்கன்று நட்டுவைக்க அழைக்கப்பட்டார். பின்னர், சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில் செத் பிரித் ஓதுதலுக்கு மத்தியில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அவர் படையணியின் அனைத்து படையினருக்கும் உரையாற்றியதன் பின்னர் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார். Nike Sneakers | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C