01st April 2021 13:00:00 Hours
மத்திய பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே, ஹம்பாந்தோட்டையிலுள்ள 12 வது படைப்பிரிவு தலைமையகத்தின் கீழ் இயங்கும் கட்டுப்பாட்டு அலகுகளுக்கு மார்ச் 29 – 30 ஆம் திகதிகளில் விஜயம் மேற்கொண்டார்.
12 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த பின்னர், அவர் 121 பிரிகேட் தலைமையகம், 122 பிரிகேட் தலைமையகம், 23 வது கஜாபா படைணயனி, 3 வது இலங்கை பாதுகாப்பு படையணி, 20 வது இலங்கை சிங்கப் படை முகாம்கள் மற்றும் பல அலகுகளுக்கான விஜயத்தையும் மேற்கொண்டார்.
ஒவ்வொரு படைப்பிரிவுகளினது சிப்பாய்களுடனும் தனது எண்ணங்களை பகிர்ந்துக்கொண்ட தளபதி கதிர்காம் ஆலயம் மற்றும் கிரிவெஹெர விகாரையில் பெற்றுக்கொண்ட பிரசாதங்களையும் வழங்கி வைத்தார்.
12 வது பிரிபடைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க மற்றும் 121 பிரிகேட் தளபதி கேணல் உதய சேரசிங்க ஆகியோருடன் கட்டளை அதிகாரிகள் , சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். Mysneakers | Patike