01st April 2021 14:00:00 Hours
இராணுவத்தின பிரதி பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மாதொல வியாழக்கிழமை (01) தொம்பகொடெவில் உள்ள ஆயுத பயிற்சி பாடசாலைக்கு முதல் முறையாக விஜயம் செய்தார்.
இதன்போது பாடசாலையில் தளபதி லெப்டினன் கேணல் தரங்க சில்வா அவரை வரவேற்றதுடன் படையினரின் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் செலுத்தப்பட்டது. பின்னர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைப்பதற்கான தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன் கல்லூரியின் பயிற்விப்பு பாடத்திட்டம் தொடர்பில் தளபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் இந்த விஜயத்தின் போது பிரதி பதவி நிலை பிரதானி, தங்குமிட வசதிகள் மற்றும் முகாம் வளாகங்கத்தின் நிலைமைகள் பற்றியும் ஆராய்தார். அதனைடுத்து படையினருக்கு அவர் ஆற்றிய உரையில்,
ஆயுத பயிற்சி கல்லூரியின் தரம் மற்றும் வசதிகளயும், உயர் தொழில்முறை தரங்களுக்கமைய முகாமை பராமரிக்க அவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும் தளபதிகள் உட்பட சகலருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இராணு ஆயுத பயிற்சிக் கல்லூரியின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஜகத் கமகே, ஆயுத சேவை பணிப்பாளர் பிரிகேடியர் பிரியந்த வீரசிங்க மற்றும் இராணுவ தலைமையகத்தின் பணிப்பகங்களை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அன்றை தினத்தின் நடவடிக்கைகள் நிறைவை எட்டியபோது, பிரதி பதவிநிலை பிரதானி விருந்தினர் பதிவேட்டில் எண்ணப்பகிர்வுகளையும் பதிவிட்டார். Adidas shoes | Air Jordan Release Dates Calendar