Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th March 2021 15:15:31 Hours

11 ஆவது படைப்பிரிவு செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் இரத்த தானம் வழங்கல்

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் இயங்கும் பல்லேகலையில் அமைந்துள்ள 11 ஆவது படைப்பிரிவு தலைமையகத்தின் படையினரால் பேராதனை போதன வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வேண்டுகோளிற்கமைய, கண்டி சனங்கராஜா மாவத்தையில் உள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (28) இரத்த தானம் வழங்கினர்.

இந்த திட்டத்தில் 11 ஆவது படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளை அலகுகளின் கீழ் பணியாற்றும் 110 படையினர் தானாக முன்வந்து இரத்த தானம் வழங்கினர். latest Nike release | Entrainement Nike