29th March 2021 15:20:31 Hours
ஜா - எல பமுனுகம லயன்ஸ் கழகம் மற்றும் லியோ கழகம் என்பவற்றின் நிதி உதவியுடன் வவுனியாவிலுள்ள தி / கெமுனுபுர ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் அவர்களுடைய பெற்றோர்களுக்கான உலர் உணவு பொதிகளும் சனிக்கிழமை (27) வழங்கி வைக்கப்பட்டன.
62 வது படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய 622 பிரிகேட்டின் 9 வது கஜபா படையணியினால் குறித்த பாடசாலை வளாகத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், பெற்றோர் மற்றும் தரம் 1 மற்றும் 2 மாணவர்களுக்கான வரைதல் போட்டிகள் நடைபெற்றதுடன், எதிர்காலத்தில் தரம் 5 புலமை பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம் 3, 4, 5 மாணவர்களுக்கு அவசியமான வினா விடைகள் தொடர்பான கற்பித்தல்களும் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக 62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல கலந்துகொண்டதுடன் படைப்பிரிவின் அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் 9 வது கஜபா படையின் கட்டளை அதிகாரி, சிவில் விவகாரங்கள் அதிகாரி, பாடசாலை பணியாளர்களும் பங்கேற்றனர். Sports Shoes | UK Trainer News & Releases