Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st March 2021 15:00:24 Hours

கடத்தலுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா பொதிகள் 54வது படைப்பிரிவினரால் மீட்பு

54 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 543 பிரிகேடின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை (30) மாலை மன்னார் பேசாலை கடற்கரைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.8 மில்லியன் பெறுமதியான 46 கிரோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

அவற்றுடன் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மீட்கப்பட்ட கஞ்சா தொகை பேசாலை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் மன்னார் மாவட்டத்தில் சேவையாற்றும் படையினரால் சுமார் 200 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத கடத்தல் கஞ்சா மற்றும் மஞ்சள் கைப்பற்றப்பட்டது. பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமைய வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் 54 வது படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் மேற்பார்வையில் பாதுகாப்பு படையினர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். Running sports | Men Nike Footwear