Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th March 2021 20:10:06 Hours

மேற்கு பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு இராணுவ கோட்பாடு தொடர்பான விளக்கமளிக்கும் விரிவுரை ஆரம்பம்

இலங்கை இராணுவ கோட்பாடு குறித்து மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளையிடும் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பதற்கான விரிவுரையொன்று பனாகொடவிலுள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்றது.

இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையின் ஒருங்கிணைப்பில் மேற்கு பாதுகாப்பு படை த லை மையக தளபதி மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த விரிவுரைகள் நடத்தப்பட்டன.

இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையின் கேணல் மூலோபாயம் மற்றும் கோட்பாடுகள் லெப்டின் கேணல் லசித் தப்ரூ விரிவுரைகளை நடாத்தினார்.

பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் ஆர்.டபிள்யூ பொன்னம்பெரும, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் அதன் கீழுள்ள கட்டளை நிறுவனங்களைச் சேர்ந்த 190 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த விரிவுரைகளில் கலந்துகொண்டனர். buy footwear | adidas poccnr jumper dress pants size