Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th March 2021 12:13:33 Hours

படையினரால் முல்லைத்தீவு ஏழை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

சிவில் இராணுவ ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் 641 வது பிரிகேட்டின் 14 வது இலங்கை சிங்கப் படையின்அனைத்து நிலைகள் ,64 வது படைப்பிரிவு மற்றும் முல்லைத்தீவுபாதுகாப்பு படைத் தலைமையகம் என்பன இணைந்து மண்ணங்கண்டல் தமிழ் ஆரம்ப பாடசாலையின் 50 ஏழை மாணவர்களுக்கு திங்கட்கிழமை (22) பாடசாலை உபகரண அடங்கிய பொதிகள் பரிசளிக்கப்பட்டன.

விநியோக விழாவில் 641வது பிரிகேட் தளபதி கர்ணல் ஜனக் ஜயவர்தன, 14 வது சிங்கப் படையின் 2 ம் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் , சிப்பாய்கள், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

அந்த பரிசுப் பொதிகளில் பயிற்சி புத்தகங்கள், வாசிப்புப் உபகரணங்கள், கற்றல் கருவிகள் மற்றும் பிற உபகரணங்கள் உள்ளடங்கியிருந்தன. bridge media | Patike