Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd March 2021 17:00:58 Hours

தென் லெபனானில் இலங்கை மற்றும் இந்தோனேசிய படைகளின் வீதி ரோந்து நடவடிக்கைகள்

தென் லெபனானை தளமாகக் கொண்ட இலங்கை படையின் பாதுகாப்பு குழு மற்றும் இந்தோனேசிய படையின் பாதுகாப்பு குழு ஆகியவற்றின் ஒன்றிணைந்த கவச வாகன மற்றும் இலகுரக வாகனங்களின் வீதி ரோந்து நடவடிக்கைகள் 2021 பிப்ரவரி மாதம் 19 ம் திகதி தென் லெபனானில் உள்ள யுனிஃபில் தலைமையகத்தில் (மிங்கி தெரு) வரலாற்றில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டது.

இது யுனிஃபில் தலைமையகத்தின் வெளிப்புறத்தில் பாதுகாப்பைப் பேணுவதற்கான ஒரு நடவடிக்கையாகும் வீதி ரோந்து நடவடிக்கை அமைப்பின் தந்திரோபாய, நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் பயிற்றுவித்தல் மற்றும் தரப்படுத்துதல் மற்றும் படையினரின் நட்பை வலுப்படுத்துதல் என்பவற்றுக்காக இது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஒவ்வொரு படையினரிடமிருந்தும் கவச வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் பங்கேற்றன.

ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு, இந்தோனேசிய தளபதி கேணல் நூருல் யாகின் ஒருங்கிணைந்த குழுவிற்கு உரையாற்றிய போது இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின் நோக்கங்களையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இலங்கை படையின் பாதுகாப்பு குழுவின் அதிகாரி கட்டளை லெப்டினன்ட் கேணல் சுஜீவா படகல்ல மற்றும் இந்தோனேசிய படையின் பாதுகாப்பு குழுவின் அதிகாரி கட்டளை லெப்டினன்ட் கேணல் ஏகா வீரா தர்மவன் ஆகியோரும் இந்த நிகழ்வோடு இணைந்துக் கொண்டனர். latest jordan Sneakers | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5