Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd March 2021 15:00:31 Hours

இந்திய உயர் ஸ்தானிகர் இராணுவ வைத்தியசாலையில் கொவிட் - 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பாக்லே இன்று (01) காலை கொழும்பு நாராஹேன்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில் கொவிட் – 19 தடுப்புக்கான தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.

இதன் போது ஜனாதிபதி ஆலோசகர் திரு லலித் வீரதுங்க மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் 19 பரவல் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது இந்திய உயர் ஸ்தானிகர், பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட் ஆகியோருடன் இணைந்து இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டத்தை மேற்பார்வை செய்ததுடன் இராணுவ வைத்திய குழுவினருடன் தனது எண்ணங்ளை பகிர்ந்துக்கொண்டதன் பின்னர் ஜனாதிபதி ஆலோசகர் திரு லலித் வீரதுங்க அவர்களுடன் இணைந்து தனக்கான தடுப்பூசியையும் ஏற்றிக்கொண்டார்.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு தடுப்பூசிகளை விரைவாக வழங்கியதையிட்டு இந்தியாவின் தாராள மனப்பான்மைக்கு ஜெனரல் சவேந்திர சில்வா பாராட்டுகளை தெரிவித்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நல்லெண்ணம் மற்றும் அயல் நாட்டு உறவின் உச்சத்தை வெளிக்காட்டுவதாகவும் குறிப்பிட்டார். முன்வரிசை பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி ஏற்றுவதற்காக வழி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது மகா சங்கத்தினர், கௌரவ சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள் , முதல் நிலை சுகாதார ஊழியர்கள் ஆகியோரும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டனர்.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட், இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கிருஷாந்த பெர்னாண்டோ, வைத்திய சாலை பணிப்பாளர் கேணல் சம்பிக அத்தநாயக்க, வைத்திய சாலை பிரதி பணிப்பாளர் கேணல் சவீன் சேமகே, இலங்கை இராணுவ தடுப்பு மருத்துவ சேவைகளின் பிரதி பணிப்பாளர் உள்ளிட்ட பல சிரேஸ்ட அதிகாரிகள் இதன்து கலந்துகொண்டனர். affiliate tracking url | Nike