Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th February 2021 14:24:01 Hours

படையினரால் விதைக்கப்பட்ட நெல் அறுவடை

கந்தலாய்- எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள 1 வது இலங்கை பொதுச் சேவைப் படையணியினால் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையானது, சனிக்கிழமை 20 ஆம் திகதி அறுவடை செய்யப்பட்டது.

மத அனுட்டானங்களுடன் சம்பிரதான முறைகளை பின்பற்றி இந்த நிகழ்வு இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.

இராணுவத் தளபதியின் 'துரு மிதுரு - நவ ரட்டக்' திட்டத்திற்கு அமைய 1 வது இலங்கை பொதுச் சேவைப் படையணியின் படையினரால் நான்கு மாதங்களுக்கு முன்பாக நெல் விதைக்கப்பட்ட வயல்களில் இவ்வாறு அறுவடைச் செய்யப்பட்டது.

கந்தளாய்- எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள 1 வது இலங்கை பொதுச் சேவைப் படையணி பிரிவின் அதிகாரி கட்டளை மேஜர் ஏ.சி.பிரசன்னவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அறுவடை நிகழவில் அப்படையணியின் அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்கள் தங்களது பங்களிப்பினை வழங்கினர்.

அத்தோடு இந்நிகழ்வில் பிரதமர விருந்தினராக 1 வது இலங்கை பொதுச் சேவைப் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சி.எஸ். தெமுனி கலந்துக்கொண்டதுடன் அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.மேலும் அறுவடைசெய்த நெல் கீத்தை அடுக்கிவைத்தல், காட்சிப்படுத்தல், சமைத்தல் , அரைத்தல்,செம்மைப்படுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளின் போது விவசாயிகள் அறுவடை காலத்தில் அமைக்கும் கொவி கெதர (விவசாயிகளின் வீடு) அமைக்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும். affiliate link trace | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK