Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th February 2021 22:32:57 Hours

தளபதியிடமிருந்த ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரணவின் சேவைக்கு அங்கிகாரம்

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதற்கு முன்னதாக மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி பதவியினை மேஜர் ஜெனரல் குமார ஜயபதி துறந்தார். பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா புதன்கிழமை (24) ) தனது அலுவலகத்திற்கு அழைப்பித்து மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்திற்கு வழங்கிய நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு சேவையை பாராட்டினார்.

கெமுனு ஹேவா படையினால் தயாரிக்கப்பட்ட பெருமைமிகு சிறந்த வீரர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரண மிலேச்சதனமான எல்.டி.டி.ஈ பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகளின் போதான சில எண்ணங்களையும் மறக்க முடியாத நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

இராணுவம் மற்றும் கெமுனு ஹேவா ஆகியவற்றில் பல முக்கிய நியமனங்களில் பணியாற்றிய மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரண 21வது படைப்பிரிவு தளபதி, 592, 522 மற்றும் 233 வது பிரிகேட்களின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

வெளியேறும் சிரேஸ்ட அதிகாரி தனது தளபதிகளின் விருப்பத்திற்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து ஊக்கங்களை பற்றியும் நினைவுப்படுத்தினார் சந்திப்பின் நிறைவில் . ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெற்றவருக்கு பாராட்டு மற்றும் பாராட்டுகளின் அடையாளமாக சிறப்பு நினைவு பரிசு வழங்கினார். Sportswear Design | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!