Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th February 2021 11:43:34 Hours

சிறப்பாக நடைபெற்ற 73 வது சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 73 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் சுபீட்சமான நாளை சௌபாக்கியமான தாய்நாடு என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை 4 ஆம் திகதி இடம்பெற்றது. இதனால் இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கையின் இறையான்மையை வலுப்படுத்தல், பிராந்திய ஒருமைப்பாடு, பொருளாதார வளர்ச்சி நல்லிணக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மதத் தலைவர்களும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் திருமதி அயோமா ராஜபக்ஷ, மான்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் திருமதி ஷிராந்தி ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர், உயர் நீதியரசர், எதிர்க்கட்சி தலைவர், பொது நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், அட்மிரல் ஒப் பிலீட் ,இலங்கை விமானப் படை மார்ஷல் ,மேல் மாகாண ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், மான்புமிகு பிரதமரின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, இலங்கை விமானப்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம், அமைச்சுக்களின் செயலாளர்கள், கொழும்பு மாவட்ட செயலாளர், மேலதிக செயலாளர்கள், தூதுவர்கள், அதிகாரிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியாரான திருமதி அயோமா ராஜபக்ஷ அவர்களின் வருகையின் போது இவர்களை கௌரவ நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ, மேல் மாகாண ஆளுநர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரினால் வரவேற்கப்பட்டதுடன் ஜனாதிபதியின் வருகையை அறிவிப்பதற்கான பொலிஸாரின் வாத்திய இசைப்புடன் வருகைத் தந்த ஜனாதிபதி, மகா சங்கத்தினரிடம் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்ட பின்னர் தமக்கான ஆசனத்தில் அமர்ந்தார்.

அதன் பின்னர் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா , கடற்படைத் தளபதி, விமானப் படைத் தளபதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரினால் அதிமேதகு ஜனாதிபதியவர்கள் தேசிய கொடிக்கம்பத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதன்போது “முகல் பெர” வாத்திய இசையுடனும் 45 பன்மொழி பாடசாலை மாணவிகளின் தேசிய கீதம் இசைப்புடனும், தேச பக்கதியுடனும் தேசியகொடி ஏற்றி வைக்கப்பட்டது.

மாகாணத்திலுள்ள 100 பாடசாலை மாணவிகளால் ஜயமங்கள கீதம் மற்றும் தேவோ வஸ்சது கெலன எமது பாரம்பரிய பாடல்கள் பாடப்பட்டன. அத்துடன் நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களின் உயிர்களை நீத்த படை வீர்ர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி இந்த நிகழ்வில் செலுத்தப்பட்டது.

இலங்கை பீரங்கி படையணியினால் 21 பீரங்கி வேட்டுகளையடுத்து முப்படையினரின் அணிவகுப்பு கௌரவ மரியாதைகள் முப்படைகளின் பிரதானியான அதிமேதகு ஜனாதிபதியவர்களுக்கு வழங்கப்பட்டது.

அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமேதகு ஜனாதிபதியின் நேரம், அதில் அவர் சிறிய வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து இலங்கையர்களுக்கும் ஒற்றுமையுடன் பயணிக்க அழைப்பு விடுத்தார், நாட்டை மீட்கும் பாதையில் உள்ள அனைத்து சவால்களையும் சமாளிக்க கூட்டாக உதவுங்கள். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தை அடைவதற்கு தியாகம் செய்த அனைவருக்கும் அவரது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்ததோடு, ஒவ்வொரு மதங்களுக்கும் உரிய மற்றும் சமமான அங்கீகாரத்தை வழங்கப்படுவதோடு அவர் எப்போதும் சிங்கள பௌத்த தலைவராக இருப்பார் என்பதை நினைவுபடுத்தினார். நாட்டின் நீதி அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் அணிவகுப்பு கட்டளை தளபதியும், மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்ணான்டோ அவர்களது தலைமையில் முப்படை அதிகாரிகள், படை வீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு சேவைப் படை வீரர்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

மொத்தம் 5922 படை வீரர்களும், பொலிஸ், சிவில் பாதுகாப்புத் துறை, விஷேட அதிரடிப் படையினர், தேசிய மாணவச் சிப்பாயினர், அவர்களின் கலாசார ஆடைகளுடனும், பின்னர் தங்கள் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். மேல் மாகாணத்தில் அறியப்பட்ட கலைஞர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் ஏனையோர் பங்கேற்புடன் கலாச்சார குழுக்களும் அன்றைய நிகழ்ச்சியை வண்ணமயமாக்கினர். நிறைவாக மிக் ஜெட் விமானங்கள் , இலகுரக விமானங்களுடன் விமான சாகசங்களும் வெளிப்படுத்தப்பட்டன.

இன்று 12 மணியளவில் கடற்படையினரின் 25 பீரங்கி வேட்டுகள் சுடும் நிகழ்வும் கொழும்பில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Authentic Sneakers | Nike Shoes, Sneakers & Accessories