Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th February 2021 06:14:16 Hours

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி, இராணுவத் தளபதியின் சுதந்திர தின செய்தி

பண்டைய இலங்கை இராச்சியங்களின் வீழ்ச்சி, போர்த்துகீசியம், டச்சு மற்றும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கீழ் 1505 முதல் 1948 வரை 400 ஆண்டுகால காலனித்துவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், 73 வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் சந்தர்ப்பத்தில் இலங்கை ஜனநாயக மற்றும் சோசலிச குடியரசின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாகவும் இராணுவத் தளபதியாகவும் இந்த செய்தியை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நமது கடந்தகால முன்னோர்களும் மூதாதையர்களும் தங்கள் தேசபக்தியுடன் விலைமதிப்பற்ற வாழ்க்கையை அர்ப்பணித்த்து வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து, பின்னர் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடியும் நாட்டை ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுவித்தனர். நமது முன்னோர்களால் காட்டப்பட்ட போர் மற்றும் இராணுவ தந்திரோபாயங்களில் விதிவிலக்கான திறன்களின் விளைவாக, வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அது சவாலாக அமைந்திருந்தது.

மேற்படி மூலோபாய மற்றும் தந்திரோபாயங்கள் ஒரு எடுத்துக்காட்டான உண்மை என நான் நம்புகின்றேன்.தேசபக்தர்களால் முன்னெடுக்கப்பட்ட உபாய பிரச்சாரங்கள், கிளர்ச்சிகள்,போராட்டங்கள் என்பனவே 1948 பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரம் கிட்ட வழி வகுத்தது எனவும் தெரிவித்தார்.

கடந்த 73 ஆண்டுகளில், நாட்டின் பாதுகாப்பாளராக இராணுவம் இருந்து வருவதோடு பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாப்பதிலும் நாட்டிற்கு எதிராக எழுந்த பல்வேறு சவால்களைப் முறியடித்து நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக இராணுவம் உறுதிபூண்டுள்ளது.

அதன்படி இராணுவத்தின் வீரர்களால் 2009 மே 18 ஆம் திகதி எல்,ரீ.ரீ.ஈ அமைப்புடனான 30 வருட யுத்த்த்தை வெற்றிக்கொண்டு பயங்கரவாத சக்திகள் நசுக்கப்பட்டதுடன், அதற்கு பங்களிப்புச் செய்து நாட்டில் உண்மையான சுதந்திரத்தை உருவாக்கியதையிட்டு மகிழ்ச்சியடைய முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த பெருமைக்குரிய அமைப்பின் அங்கத்தவர்கள் என்ற வகையில், நமது நாட்டின் சுதந்திரத்துக்கு விரோதமாக செயற்படுவோர், சமூக விரோத செயல்கள், போதைப்பொருள் கடத்தல் காரர்கள், பாதாள உலக கோஷ்டிகள் பயங்கரவாத சக்திகள் ஆகியனவையும் முறியடிக்கும் முயற்சிகளில் இராணுவம் பங்களிப்பை வழங்கி வருகிறது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிக்கு மேலதிகமாக வேறுவிதமான அச்சுறுத்தல்களின் போதும் அவற்றை எதிர்கொள்ள தயாரான நிலையில் இராணுவம் இருப்பதுடன், ஒரு வருடத்திற்கு முன்பாக ஆரம்பித்த கொவிட் – 19 தொற்று நோய் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் சொந்த நாட்டின் மக்களை பாதுகாப்பதற்கான இராணுவம் அர்ப்பணிப்பான சேவைகளை செய்து வருகிறது என்பதை நன்றியுடன் நினைவுகூறுகிறேன்.

நமது வலிமை, நினைவு விழாக்கள், நமது மரபுகள், மற்றும் சடங்குகள், கலாச்சார பாரம்பரியம் போன்றவற்றை சித்தரிக்கும் நேர்த்தியான மற்றும் அற்புதமான இராணுவ அணிவகுப்புகள் ஒரு முக்கிய மற்றும் பிணைப்பு அம்சமாக இருந்தன. அதே நேரத்தில் நமது கடந்தகால சுதந்திர போராளிகளை ஒரு பாரம்பரிய அம்சமாக நினைவுகூருவதுடன் தற்காலத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்பட வேண்டியதன் காரணமாக அந்த நிகழ்வுகள் வரையறுக்கப்பட்டன.

இந்த நடைமுறைகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குன்ற முடியும் என்ற நிலைமை உள்ளிட்ட பல அச்சறுத்தல்களை நாடு எதிர்கொண்டாலும், சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்பது தேசிய கடமையாகும்.

தாய்நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 73 ஆண்டுகள் நிறைவடைந்ததும், நம் முன்னோர்கள் மற்றும் தேசிய வீரர்களின் துணிச்சல், அச்சமின்மை ஆகியவற்றின் நினைவுகளை மிகுந்த பயபக்தியுடன் நினைவுகூறுகிறோம். அவர்கள் 'நிர்மலத்தின்' மிக உயர்ந்த ஆனந்தத்தை அடைந்தனர். அதேபோல், உயிர் நீத்த எங்கள் போர்வீரர்கள் அனைவருமே மிகுந்த மரியாதையுடன் நினைவுகூரப்படுகிறார்கள், மேலும் காயமடைந்த மற்றும் இன்னும் புனர்வாழ்வு , மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அனைவருக்கும் விரைவாக மீண்டு வருவர் என பிராத்திக்கிறேன்.

ஒரு கண்ணியமான இராணுவத்தின் உறுப்பினர்களாக இருப்பதால், பகல் அல்லது இரவைப் பொருட்படுத்தாமல் நாட்டிற்கு ஒரு சிறந்த சேவையைச் செய்யும் அதே வேளையில், அனைத்து அதிகாரிகள், பிற அணிகள், இலங்கையின் ஐ.நா அமைதி காக்கும் படையினர், சிவில் பணியாளர்கள் மற்றும் இராணுவத்தில் உள்ள மற்றவர்கள் ஆகியோர் நாட்டின் நலனுக்காக எதிர்காலத்திலும் அவர்களுடைய கடமைகளை நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த வரலாற்று நாளில், ஓய்வுபெற்ற போர் வீரர்கள் அனைவரையும் நான் நினைவுகூர்கிறேன், அவர்கள் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க சேவையை வழங்கியிருந்தனர். இது எங்கள் போர் வீரர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒரு ஊக்கத்தை அளித்தது. முடிவில், இந்த முக்கியமான 73 ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் சந்தர்ப்பத்தில், எங்கள் கண்ணியமான இராணுவ உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசுக்கு அல்லது அதன் எதிராக எழக்கூடிய எந்தவொரு சவால்களையும் முறியடிக்க உன்னதமான ஆசீர்வாதத்துடன் தேவையான அனைத்து வலிமையும், தைரியமும், உறுதியும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் வெற்றிகரமான எதிர்கால விடியல்! Nike air jordan Sneakers | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1