Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd February 2021 20:20:13 Hours

சுதந்திர தினத்தில் இராணுவ அதிகாரிகள் 337 பேருக்கும் 8,226 ஏனைய இராணுவச் சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு

முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் 73 ஆவது சுதந்திர தினத்தின் சிறப்பம்சமாக, இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் அதிகாரிகள் 337 பேருக்கும், 8226 ஏனைய இராணுவச் சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பிரகாரமே இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

14 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் நிலைக்கும், 23 கேணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 35 லெப்டினன் கேணல்கள் கேணல் நிலைக்கும், 34 மேஜர்கள் லெப்டினன் கேணல் நிலைக்கும் 206 கெப்டன்கள் மேஜர் நிலைக்கும், 22 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும், 3 இராண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் நிலைக்கும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

ஏனைய இராணுவச் சிப்பாய் நிலைகளில் 212 வொரண்ட் அதிகாரி (11) வொரண்ட் அதிகாரி (1) பதவிக்கும் நிலைக்கும், 795 ஸ்டாப் சார்ஜன்கள் வொரண்ட் அதிகாரி (11) நிலைக்கும் , 1351 சார்ஜன்கள் ஸ்டாப் சார்ஜன்கள் பதவி நிலைக்கும், 1422 கோப்ரல்கள் சார்ஜண்களாகவும், 2070 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல்கள் நிலைக்கும், 2415 சாதாரண சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல்களாகவும் 2021 பெப்ரவரி 04 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

ஓகஸ்ட் 2019 இல் ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக பதவியேற்ற பின்னர் இராணுவ வரலாற்றின் ஒரு சிறப்பம்சமாகவும் மைல்கல்லாகவும் கருதப்படக்கூடிய விதத்தில், இன்று வரை இராணுவத்தின் 2476 அதிகாரிகளும் 50,860 ஏனைய இராணுவச் சிப்பாய்களும் பதவி உயர்வுகளைப் பெற்றுள்ளனர்.

அவர்களில், 95 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் பதவிக்கும், 181கேணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 286 லெப்டினன் கேணல்கள்கள் கேணல் நிலைக்கும் 390 மேஜர்கள் லெப்டினன் கேணல் நிலைக்கும், 929 கெப்டன்கள் மேஜர் நிலைக்கும், 434 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும் 161 இரண்டாம் நிலை லெப்டினன்கள் லெப்டினன் நிலைக்கும் பதவி உயர்வு செய்யப்பட உள்ளனர் (நிரந்தர &தொண்டர் படை) ஜெனரல் ஷவேந்திர சில்வா தளபதியாக பதவியேற்ற பின்னர் இதுவரை இராணுவத்தில் 1540 வொரண்ட் அதிகாரிகள் வொரண்ட் அதிகாரி -1 நிலைக்கும் , 4462 ஸ்டாப் சார்ஜன்கள் வொரண்ட் அதிகாரி-11 நிலைக்கும், 11, 6410 சார்ஜன்கள் ஸ்டாப் சார்ஜன்களாகவும், 9766 கோப்ரல்கள் சார்ஜன் நிலைக்கும், 13,480 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும் , 15,202 சாதாரண சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல்கள் நிலை உள்ளிட்டமொத்தமாக 50, 860 ஏனைய இராணுவச் சிப்பாய்கள் பதவி உயர்வுபெற்றுள்ளனர்.

அதன்படி நாட்டுக்கு வலுவான சேவை ஆற்றியவர்களுக்கு விரைவாக பதவி உயர்வு பெற்றுக்கொடுத்தமைக்கு ஜனாதிபதிக்கு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நன்றிகளை கூறிக்கொண்டார். நாட்டின் பாதுகாப்புக்காக உழைப்பவர்களுக்கு இவ்வாறான பதவி உயர்வுகள் வழங்கப்படுவதால் அவர்கள் ஊக்குவிக்கப்படுவர் என்றும், களச் செயற்பாடுகள், விளையாட்டு,கொவிட் – 19 பரிமாற்றத்திற்கு எதிரான போராட்டம் என்பவற்றை அடிப்படையாக கொண்டே இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமையும் மேல் நிலை அடிப்படையாக் கொண்டு மட்டும் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். Sports News | Patike