Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd February 2021 18:20:13 Hours

பாதுகாப்பு அமைச்சர் மற்றும் செயலாளர் இறுதி ஒத்திகையை மேற்பார்வை செய்தனர்

நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், பாதுகாப்பு மற்றும் ,உள்நாட்டு அலுவல்கள் , அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோகர் கொழும்பு 07 சுதந்திர சதுக்க வளாகத்துக்கு நேற்று (02) விஜயம் செய்து அங்கு இடம்பெற்ற வியாழக்கிழமை (04) இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுகான இறுதி ஒத்திகைகளை மேற்பார்வை செய்தனர். அவர்களுடன் இணைந்து பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகாஹாதென்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன, பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்கிரமரட்ன, அரச அதிகாரிகள் ஆகியோர் மரியாதை அணிவகுப்பு நடவடிக்கைகளை மற்றும் ஏனைய ஒழுங்கமைப்புக்ளை கண்காணித்தனர்.

பின்னர் கௌரவ அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் வாகன அணிவகுப்புகளின் ஏற்பாடுகள் பற்றி ஆராய்ந்ததுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள், சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பன பற்றியும் ஆராய்ந்த பின்னர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதன்படி இலங்கையின் 73 வது சுதந்திர தின நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், ஆலோசகர்கள், செயலாளர்கள் ஆளுநர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகள், பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அழைப்பாளர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் வியாழக்கிழமை (04) காலை இடம்பெறவுள்ளது. Authentic Sneakers | Jordan Shoes Sale UK