Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st February 2021 08:52:21 Hours

ஓய்வு பெறும் பொறியியல் படைத் தளபதியின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட்டது

இலங்கை பொறியியல் படையின் சிரேஸ்ட அதிகாரியும் இராணுவ தலைமையகத்தின் திட்டமிடல் முகாமைத்துவ பிரிவின் மேலதிக பணிப்பாளருமான இலங்கை பொறியியல் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் ஓய்வு பெறவுள்ளதையிட்டு அவரை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை (29) அழைப்பித்து பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.

இதன்போது அவருடைய மூன்று தசாப்த நீண்ட சேவைக்கு இராணுவ தளபதி பாராட்டு தெரிவித்தார்.

இதன் போது மேஜர் ஜெனரல் குமார பீரிஸின் பொறியியல் படையில் வகித்த முக்கியமான வகிபாகத்தையும் சவாலான திட்டங்களை முன்னெடுப்பதில் வழிகாட்டியதையும், அர்ப்பணிப்பான சேவையும் நினைவுகூர்ந்தார். மேலும் ஶ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தின் பணிகளை நிறைவு செய்வது தொடர்பிலும் அதேநேரம், மேஜர் ஜெனரல் குமார பீரிஸின் காலத்தில் பொறியியல் படையினரால் முன்னெடுக்கப்பட்ட தயாரிப்புக்களை மேற்கோள் காண்பித்தும் பாராட்டினார்.

பின்னர் மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் இராணுவ தளபதியின் பாராட்டுக்களுக்கு நன்றிகளை கூறிக்கொண்டதுடன், இராணுவத்தில் அவர் பெற்றுக்கொண்ட விடயங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். அதனையடுத்து இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் குமார பீரிஸூக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கிவைத்தார். Adidas footwear | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD