Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st February 2021 07:00:21 Hours

215 மில்லியன் பெறுமதியான தடைச் செய்யப்பட்ட பொருட்களை மீட்ட 54வது படைப்பிரிவினருக்கு பாராட்டு சான்றிதழ்

54 வது படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களை பாராட்டும் நிகழ்வு அண்மையில் மன்னாரிலுள்ள படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது.

அதன்படி ஹெராயின், போதைப்பொருள், போதைப்பொருள், மஞ்சள், கஞ்சா மற்றும் சட்டவிரோத வேட்டைக்காரர்கள் வன சட்டவிரோதமாக மரம் வெட்டுவோர், மணல் அகழ்வோர், சுரங்கங்கம் தோன்றுவோர் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்வதில் பங்களித்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

மன்னார் மாவட்டம் தென்னிந்தியாவுடன் அருகாமையில் இருப்பதால், அண்மைய காலங்களில் அந்த பகுதி சட்டவிரோத கடத்தல்காரர்களின் மையமாக மாறியுள்ளதுடன், மன்னார் மாவட்டத்திலுள்ள காடுகள் எல்லா மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் காணப்படுவதால் அதன் ஊடாக இலகுவாக விற்பனை நிலையங்களுக்கு கொண்டுசெல்லக் கூடியதாக காணப்படுகின்றது.

மேற்படி நிலைமை தொடர்பாக ஆராய்ந்து சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பதற்கான ஜனாதிபதியின் நோக்கத்தின் பிரகாரம், இராணுவத் தளபதியின் ஆலோசணையின் பேரில் வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாரவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பொலிஸாருடன் இணைந்து 54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டாராவின் கண்காணிப்பில் 2020 ஆம் ஆண்டில் மேற்படி பகுதிகளில் விரிவான பாதுகாப்பு வலையமைப்பு ஒன்று நிறுவப்பட்டது.

அதன்படி அந்த வருடத்தில் 215 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத பொருட்கள் மீட்கப்பட்டதுடன், அவற்றுடன் சிக்கியவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதற்கமையவே, 54 வது படைப்பிரிவு, 541, 542 மற்றும் 543 பிரிகேட்டின் 37 அதிகாரிகள் மற்றும் 336 சிப்பாய்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டனர். 54 வது படைப்பிரிவின் பாதுகாப்பு நிலைமை காரணமாக 2019 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சட்ட விரோத நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. . Running sports | Zapatillas de running Nike - Mujer