Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2021 15:27:03 Hours

இராணுவ வீரர்களுக்கு சனிக்கிழமை 7500 தடுப்பூசிகளை ஏற்றலாமென எதிர்பார்ப்பு

கொவிட் – 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன் வரிசையிலிருந்து போராடும் இராணுவ வீரர்களுக்கு ஏற்றுவதற்காக 'அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பலாலி இராணுவ வைத்தியசாலை, அநுராதபுர இராணுவ வைத்தியசாலை,மன்னார் இராணுவ கள வைத்தியசாலை, வவுனியா இராணுவ கள வைத்தியசாலை, மின்னேரியா இராணுவ தள வைத்தியசாலை,அம்பாறையிலுள்ள இராணுவ கம்பெட் பயிற்விப்புக் கல்லூரி, கிளிநொச்சி இராணுவ தள வைத்தியசாலை, முல்லைத்தீவு இராணுவ தள வைத்தியசாலை,கொழும்பு இராணுவ வைத்தியசாலை, பனாகொடை 1 வது இலங்கை இராணுவ வைத்திய படையணி, தியத்தலாவை இராணுவ வைத்தியசாலை, 11 ஆவது படைப்பிரிவின் சிகிச்சை நிலையம், 22 வது படைப்பிரிவின் சிகிச்சை நிலையம், 61 வது படைப்பிரிவின் சிகிச்சை நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இத்திட்டத்தை மேற்பார்வை செய்துவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று (30) பலாலி இராணுவ தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்ததுடன் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவிருந்த படையினர் மத்தியில் கலந்துரையாடினார். அதன்படி மேற்குறிப்பிட்ட இராணுவ வைத்தியசாலைகள் ஒவ்வொன்றிலும் 500 தடுப்பூசிகள் என்ற அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், 7500 தடுப்பூசிகளை வழங்கி நிறைவு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இராணுவத்தினருக்காக குறித்து ஒதுக்கப்பட்ட 31,000 தடுப்பூசிகளை இன்றிலிருந்து(30) அடுத்த 3 நாட்களுக்குள் வழங்கி நிறைவு செய்ய இராணுவ வைத்தியக் குழு எதிர்பார்த்துள்ளது. நாராஹேன்பிடவில் உள்ள கொழும்பு இராணுவ மருத்துவமனை, பனாகொடையிலுள்ள இராணுவ மருத்துவமனைகளின் இராணுவ மருத்துவ குழுவினரால் கொவிட் – 19 தடுப்பு போராட்டத்திலுள்ள 1000 வீரர்களுக்கு நேற்று 29 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் கலந்துகொண்டார். Sneakers Store | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ