Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th December 2020 18:00:06 Hours

வன்னி படையினர் சின்னவலையன்கட்டு குளக்கட்டை பழுது பார்த்தல் மற்றும் ஏ 9 வீதியை இயல்பு நிலைக்கு கொண்டு வருதல்

புரேவி சூறாவளியின் தாக்கம் காரணமாக சேதமடைந்த சின்னவலையன்கட்டு குளக்கட்டை கடந்த இரண்டு நாட்களில் (5-6 டிசம்பர்) கிராம மக்கள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பகுதியில் பணியாற்றும் இராணுவத்தினர் பிளவுகளை முற்றிலுமாக சரிசெய்தனர்.

113 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் 200 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கும் குளம் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பாரசன்குள கிராம சேவையாளர், இரணையிலுப்புகுளத்தின் நீர்ப்பாசன தொழில்நுட்ப அதிகாரி, மடு உதவி பிரதேச செயலாளர், மற்றும் பாரசன்குள கிராம அபிவிருத்தி அதிகாரி ஆகியோரின் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுடன் இராணுவ படையின் ஒரு அணி பழுதுபார்ப்புகளை கவனித்து.

இதற்கிடையில், வவுனியா நகரில் உள்ள தபால் நிலையம் அருகே பிரதான வீதியின் குறுக்கே விழுந்திருந்த பெரிய மரம் 2020 டிசம்பர் மாதம் 03 ம் திகதி 17 வது (தொண்டர்) இலங்கை சிங்க படையின் ஒரு பிரிவு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழிலாளர்களுடன் இணைந்து சுமார் 0200 மணி நேரத்தில் மரத்தை அகற்றி ஏ -9 வீதியின் போக்குவரத்தினை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தனர்.Sports Shoes | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival