Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd December 2020 23:49:40 Hours

சூறாவளி தாக்கத்திற்கு எதிராக தயார் நிலையில் உள்ள வாகனங்கள் மற்றும் படையினரை இராணுவ தளபதி பரீட்சித்தல்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கனரக வாகன வளாகத்திற்கு இன்று 2 ஆம் திகதி அவசர விஜயத்தினை மேற்கொண்டதோடு, கோகிலாய், வவுனியா மற்றும் திருகோணமலை, வன்னி மற்றும் முல்லைதீவு பகுதிகளுக்குள் சூறாவளி அவசரநிலை ஏற்பட்டால் அவசர தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் இராணுவத்தின் மிக அத்தியாவசிய வழங்கல் , இராணுவத்தால் தயாரிக்கப்பட்ட யூனிகோன் பப்பல்கள், பொறியியற்லாளர் காலாட்படை வாகனங்கள், தோண்டும் இயந்திர வாகனங்கள்,பெக்கோ இயந்திர வாகனங்கள் மற்றும் ஏனைய பாகங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவைகள் தொடர்பாக அறிந்து கொண்டார்.

மேலும் இராணுவ தளபதி படையினர் மத்தியில் உரையாற்றுகையில் எந்தவொரு அவசர நிலையின் போதும் அவர்களின் சிறந்த அவசரகால தயார் நிலையின் உன்னத தன்மையை எடுத்துரைத்துடன், இது ஒரு சிறந்த தேசிய சேவை என்று அவர்களை ஊக்கப்படுத்தினார், எந்தவொரு அவசரகால பணிக்கும் தயாராக இருக்கும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை உன்னிப்பாகக் கவனித்த அவர், எந்தவொரு உடனடி தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடும் போது, தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக அதிகபட்சமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு படையினருக்கு அறிவுறுத்தினார்.

மேலும் இராணுவ தளபதி வன்னி பாதுகாப்பு படையினரின் இந்த அவசரகால தயார் நிலைகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவத்தார். ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் முதன்மை குறிக்கோள் பெரும்பாலும் உயிர் இழப்பு, காயம் மற்றும் சொத்து இழப்பு மற்றும் சொந்த தேடல் மற்றும் மீட்பு அணிகளுக்கு ஏற்படும் சேதம் ஆகியவற்றைக் குறைத்தல், தேடல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடும்போது போது வளங்களைப் பயன்படுத்துவதை மேம்படுத்துதல் மற்றும் அவசர சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது சரியான முடிவுகளையும் செயல்களையும் செயல்படுத்துதலின் முக்கியத்துவம் தொடர்பாகவும் அவர் தெரிவித்தார். Buy Kicks | Air Jordan Release Dates 2020