Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2020 19:00:40 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஜயந்த ஜயவீர அவர்களுக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் சேவை நலன் பாராட்டு

இலங்கை இலேசாயுத காலாட் படை படைத் தளபதியும் புத்தள அதிகாரிகள் தொழில்வாண்மை கல்லூரியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜெயநாத் ஜெயவீர 34 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை இலேசாயுத காலாட் படை மற்றும் இராணுவத்திற்கு வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவைகளை பாராட்டும் முகமாக சனிக்கிழமை (28) பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட்படை படைத் தலைமையகத்தில்சேவைநலன் பாராட்டு விழா நடாத்தப்பட்டது.

அன்றைய நிகழ்விற்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்களை பிரதி நிலையத் தளபதி கேணல் ரவீந்திர ஜயசிங்க வரவேற்றார். புதிய படைத்தளபதியும் 56வது படைப்பிரிவு தளபதியுமான மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ மற்றும் நிலையத் தளபதி பிரிகேடியர் அனுர திசாநாயக்க ஆகியோரும் பிரதம விருந்தினரை வரவேற்றனர். அத்தோடு பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை இராணுவ அணிவகுப்பு மரியாதை என்பன வழங்கப்பட்டன.

அணிவகுப்புத் மரியாதையினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் தாய்நாட்டிற்காக உயிர் நீத்த ஆயிரக்கணக்கான இலேசாயுத காலாட்படை படையினருக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முகாம் வளாகத்தில் மரக்கன்று நாட்டினார். பின்னர் பிரதம விருந்தினர் தனது எண்ணங்களை படையினருடன் பகிர்ந்துக் கொண்டார்.

தனது உரையில் இராணுவம் என்பது ஒரு உன்னதமான தொழில் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், இது அனைவருக்கும் வெற்றிகரமாக செய்ய முடியாது மற்றும் சாதிக்க முடியாது மேலும் இது வாழ்க்கையின் சிறந்த முடிவுகளுக்கு உங்களுக்கு கல்வி கற்பிக்கும் ஒரே ஒரு வழிமுறையாகும், அதாவது பணி உறுதி, அர்ப்பணிப்பு, தொழில்முறை மற்றும் தார்மீக, சுய கௌரவம், உயர்ந்த ஒழுக்கம், தேசபக்தி சாதனைகள், தேசத்தின் மீட்பர் போன்றவை. எனவே நீங்கள் பல முனைகளில் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள், மேலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு படை மற்றும் இராணுவத்திற்கு அனைத்து மட்டங்களிலும் சேவை வழங்க வேண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலே கூறப்பட்ட நல்லொழுக்கங்களுடனான உங்கள் நடத்தை உங்களை எப்போதும் பிரதிபலிக்கும் என்றும் படையில் உள்ள அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், மேலும் உள்வரும் சிரேஸ்ட அதிகாரிகளுக்கும் அதே உற்சாகத்துடன் சிறந்த ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

சாயங்காலம் வண்ணமயமான மற்றும் மறக்கமுடியாத அம்சங்களில் ஒன்றான இராபோசணம் அதிகாரிகள் உணவறையில் இடம்பெற்றது. தலைமை விருந்தினரின் களங்கமற்ற சேவைக்கு பாராட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது, சேவா வனிதா பிரிவின் வெளிச்செல்லும் தலைவி திருமதி அனுஜா ஜயவீர உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் (29), அதிதிகள் புத்தகத்தில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தபின், ஓய்வு பெற்ற செல்லும் சிரேஸ்ட அதிகாரி அவர்களுக்கு வழியில் வாழ்த்துக்களுடன் மரியாதை வழங்கப்பட்டது. Running sport media | Nike