Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2020 21:49:40 Hours

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் விடைப் பெறும் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு

விடைப் பெற்று செல்லும் இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குழு கெப்டன் சீன் அன்வின் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஐயன் கெய்ன் ஆகிய இருவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் (30) திங்கட்கிழமை சந்தித்தனர்.

அவுஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் சீன் அன்வின் தனது பதவிக் காலத்தில் இரு நாட்டினதும் நல்லுறவுக்காக வழங்கிய ஒத்துழைப்பிற்கு இராணுவத் தளபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். அதே நேரத்தில், இலங்கையில் உள்ள அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு அவருக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஐயன் கெய்ன் அவர்களையும் இராணுவ தளபதிக்கு அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிட தக்க விடயமாகும்.

இராணுவ தளபதி மற்றும் அவுஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இருதரப்பு முக்கியத்துவம், பரஸ்பரம் மற்றும் கொவிட்-19 தொற்று இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவில் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து பரிமாற்றம் செய்துக்கொண்டனர். இந் நல்லெண்ண சந்திப்பில் அடையாளமாக பாதுகாப்பு ஆலோசகரும் இராணுவத் தளபதியும் நினைவுச்சின்னங்களை பரிமாறிக்கொண்டனர். Running Sneakers | Nike